அட, இதுலையும் இந்தியாதான் நம்பர் ஒன்!

உலகளவில், இந்தியாவில் தான், 'ஆன்லைன்' வாயிலாக அதிகம்பேர் செல்போன் வாங்கி உள்ளனர்.

அட, இதுலையும் இந்தியாதான் நம்பர் ஒன்!

உலகளவில், இந்தியாவில் தான், 'ஆன்லைன்' வாயிலாக அதிகம்பேர் செல்போன் வாங்கி உள்ளனர்.

கடந்தாண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் தான் ஆன்லைன் வாயிலாக, அதிகளவிலான போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு 45 சதவீதம் என்ற நிலையிலும், இதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளது. இங்கு 39 சதவீத செல்போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், சீனா 34 சதவீத பங்களிப்புடன் உள்ளது. அமெரிக்காவில், 24 சதவீதம் மட்டுமே. மின்னணு பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் தென்கொரியாவில், ஆன்லைன் வாயிலாக வெறும், 16 சதவீதம் அளவுக்கே விற்பனை நடந்துள்ளது.