பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் -ஜே.பி.நட்டா

பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் -ஜே.பி.நட்டா

கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டால் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியது சர்ச்சையாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மதம் 10 ஆம் தேதி 224 சட்ட மன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதில் ஹவேரி தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிட உள்ளார். இதற்கான வேட்பு மனு தாக்கல்  செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டார்.
 
அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசிய போது கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பாஜக அமையாவிட்டால் பிரதமரின் ஆசிர்வாதம் விலகிவிடும் என்றும் தொடர்ந்து பிரதமர் ஆசிர்வாதம் தேவை என்றால் தாமரைக்கு அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கர்நாடக வாக்காளர்களை பாஜக தலைவர் நட்டா மிரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.