ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் கஜவாகன சேவை!

நவராத்திரி நடந்து வரும் நிலையில், பிரம்மோத்சவத்தின் ஆறம் நாளான இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கஜவாகன சேவை நடந்தது.

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் கஜவாகன சேவை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான இன்று  இரவு  உற்சவர் மலையப்ப சுவாமியின் கஜ  வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

கஜ வாகன சேவை கண்டருள கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு மலையப்ப சுவாமிக்கு தூப, தீப, நைவேத்திய  சமர்ப்பணம்  நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்...! திருப்பதியில் களைகட்டிய பக்தர்கள் கூட்டம்...

தொடர்ந்து கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷம், நாட்டியம், நடனம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ஜீயர்கள்,வேத பண்டிதர்கள் ஆகியோர் புடை சூழ, தேவஸ்தான அதிகாரிகள் வழிநடத்த ஏழுமலையானின் கஜ வாகன சேவை நடைபெற்றது.

அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து சாமி கும்பிட்டனர்.

மேலும் படிக்க | 1,57,000 புதிய ரூபாய் நோட்டுகளால் மகாலட்சுமி அலங்காரம்!