கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்...! திருப்பதியில் களைகட்டிய பக்தர்கள் கூட்டம்...

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்...! திருப்பதியில் களைகட்டிய பக்தர்கள் கூட்டம்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவம் நேற்று தொடங்கி அடுத்த மாதம்  5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று மாலை கோவிலில் நடைபெற்றது.. அப்போது தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து இரவு ஏழுமலையானின் பெரியசேஷ வாகன சேவை கோவில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கூடியதால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.