பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை இன்று தொடங்குகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை மத்திய நிதியமைச்சர் இன்று துவக்குகிறார்

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை இன்று தொடங்குகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை இன்று முதல் துவக்குகிறார். முதல்கட்டமாக, விவசாயம் மற்றும் வேளாண் செயலாக்கத் துறை நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வை அதிகரிப்பதற்காக, தொழில் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் உட்பட பல்வேறு பிரிவினருடன், அவர் ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்

நடப்பு நிதியாண்டில், அரசு இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை 6 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்றும் கருதுகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 9 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்து உள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பின் வளர்ச்சி கண்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பட்ஜெட், ஒமிக்ரான் தொற்று பாதிப்புகளையும் சமாளித்து, வளர்ச்சி காணும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.