5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்...

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும் என்றும், மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்...

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அவர், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக பிப்பரவரி 27-ம் தேதி மற்றும் மார்ச் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

5 மாநிலங்களில் உள்ள 690 தொகுதிகளிலும் 18 கோடியே 43 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும், அதில் 8 கோடியே 55 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள் என்றும், 24 லட்சத்து 98 ஆயிரம் பேர் முதன் முறையாக வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும் என, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.