தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த ரகசிய தகவல்...முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கமா?

தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த ரகசிய தகவல்...முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கமா?

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய, அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சுரங்க ஒதுக்கீடு உரிமம்:

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் என்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு உரிமம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

அமலாக்கத்துறை சோதனை:

தொடர்ந்து, இதுதொடர்பாக சட்டவிரோத சுரங்க வழக்கில், நேற்று ஹேமந்த் சோரனின் நெருங்கிய கூட்டாளியான பிரேம் பிரகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Jaybeam-film-crew-in-trouble-again-what-will-happen-this-time

சிக்கிய ஆதாரங்கள்:

இந்நிலையில் சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில், ஹேமந்த் சோரனுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை:

இதனால் அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய, ஜார்கண்ட் ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.