2021ல் படித்தவர்கள், தகுதி அற்றவர்களா? - விளம்பரத்தால் சர்ச்சை  

HDFC வங்கி வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தில் 2021 ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேர்முகத் தேர்வில் பங்கேற்க  தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் இளைஞர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பாடங்களும் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரபல தனியார் வங்கியான எச்டிஎப்சி வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2021ஆம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பர பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் சர்ச்சையை கிளப்ப, இது எழுத்து பிழையே அன்றி வேறு ஒன்றும் இல்லை என எச்டிஎப்சி வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.