மின்துறை ஊழியர்களை வார்னிங் செய்த தமிழிசை...!

மின்துறை ஊழியர்களை வார்னிங் செய்த தமிழிசை...!

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பா விட்டால்  எஸ்மா சட்டம் பாயும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுதுள்ளார்.

ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்:

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை திரும்பப்பெறக்கோரி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மின்விநியோகம் பாதிப்பு:

இந்த காலவரையற்ற போராட்டத்தால், புதுச்சேரி கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை, காலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எச்சரிக்கை விடுத்த தமிழிசை:

இந்த பின்னணியில், புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது மிகவும் கண்டித்தக்கது என்றார். செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்,  மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பா விட்டால்  எஸ்மா சட்டம் பாயும் எனவும் தமிழிசை எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க: மின்துறையை தனியாராக்குவதற்கு துடிக்கும் அரசு...ஆனால் எதிர்க்கும் ஊழியர்கள்...இடையில் பாதிக்கும் மக்கள்!

இதேபோல், செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்வெட்டை ஏற்படுத்திய மின்துறை  ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்படுவார்கள் என்றார்.  மேலும், இன்று பிற்பகலுக்குள்  அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்த அவர். அனைத்து துணை மின் நிலையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவராகள் என்றும் தெரிவித்தார்.