காவிரி நீர் விவகாரம்:" உச்சநீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" அமைச்சர் துரைமுருகன்!!

காவிரி நீர் விவகாரம்:" உச்சநீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" அமைச்சர் துரைமுருகன்!!

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாடுகளால் உச்சநீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டிற்கான தண்ணீரை கர்நாடக அரசு முழுமையான அளவில் திறந்துவிட வில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

மேலும், தமிழகத்திற்கு 9-ம் தேதி வரை கர்நாடக அரசு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்காததை கண்டித்து, தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தின் முடிவில், தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல்பாடுகளால் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும், ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கர்நாடக அரசு 53. 77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு 15.79 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே வழங்கி உள்ளதால், தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || நாங்குநேரி சம்பவம்: "மாணவர்களிடையேயான வேறுபாடு, வன்முறையாக மாறியது சகிக்க முடியாத ஒன்று" முதலமைச்சர் கண்டனம்!!