22 பேருடன் மாயமான விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு.. 4 இந்தியா்கள் உள்பட 19 பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் 22 பேருடன்  மாயமான விமானத்தை தேடி வந்த ராணுவத்தினர், 5 மணி நேரத்திற்கு பிறகு அது விழுந்த இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

22 பேருடன் மாயமான விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு.. 4 இந்தியா்கள் உள்பட 19 பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் இன்று காலை 4 இந்தியர்கள், 2 ஜெர்மன் நாட்டவர்கள் உள்பட 22 பேருடன் டாரா ஏர்ஸ் 9 NAET விமானம் பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கி புறப்பட்டது. இதில் விமானி உள்பட 4 பேர் கொண்ட விமான குழுவும்  இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் விமானம் வானில் பறந்த 15 நிமிடத்தில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கியிருக்க கூடும் என அஞ்சிய நேபாளம் அரசு, உடனடியாக தேடுதல் பணியில் ராணுவத்தை களமிறக்கியது. இதற்கென 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு, முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள கோவாங் கிராமத்தில் லாம்சே ஆற்றின் முகத்துவார பகுதியில் விமானம் விழுந்ததாக அக்கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.  இதையடுத்து அங்கு தேடுதல் பணியை தொடங்கியுள்ள அதிகாரிகள், விமானம் மற்றும் பயணிகளின்   நிலை தெரியவில்லை என கூறியுள்ளனர்.