முடங்கியது நீட் விண்ணப்பிப்பதற்கான இணையதளம்..! 

முடங்கியது நீட் விண்ணப்பிப்பதற்கான இணையதளம்..! 

செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார் மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் இன்று மாலை ஐந்து மணியிலிருந்து செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது

ஆனால் அதிக அளவில் மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால்,தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு www.nta.ac. in என்ற இணையதளம் முடங்கி உள்ளது. அது எப்போது சரியாகும் என்று எந்த அறிவிப்பும் தற்போது வெளியிடப்படவில்லை.