அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி... தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி...

மகாராஷ்டிராவில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி... தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி...
மகாராஷ்டிராவில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த கூட்டணி மகாவிகாஸ் அகாடி என அழைக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டுயிட்டு தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும்  என காங்கிரஸ் மூத்த தலைவர் நசீம் கான் தெரிவித்திருந்தது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இது குறித்து மறைமுகமாக சாடிய முதல்வர் உத்தவ் தாக்கரே காங்கிரசாரை மக்கள் பாதணிகளால் அடிப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாவிகாஸ் அகாடி கூட்டணி குறித்து முடிவெடுப்பது அவர்களின் பொறுப்பு என்றும் காலணியை கொண்டு அடிப்பார்களோ, மாலையை போடுவார்களோ எங்களுக்கு தெரியாது, ஆனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என உறுதிப்பட கூறினார்.