டெல்லி : 2000 தோட்டக்கள் பறிமுதல்...! ஆறு பேர் கைது...!

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கிழக்கு டெல்லியில், 2000 தோட்டாக்கள் பறிமுதல் செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழா வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அரசங்கம் முழு முனைப்புடன் செய்து வருகிறது. அதாவது "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" திட்டத்தின் கீழ் அரசாங்கம் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, டெல்லியில் 2000 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பறிமுதல் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில், டெல்லியில் 'ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்' கைது செய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பிறகு இன்று, இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.