இந்தியாவில் நேற்றை விட சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு...!எவ்வளவு சதவீதம் தெரியுமா?

இந்தியாவில் நேற்றை விட  சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு...!எவ்வளவு சதவீதம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முந்தைய நாளை விட 8 புள்ளி ஒரு சதவீதம் குறைந்து பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று மட்டும் தொற்றில் இருந்து 12 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளதோடு பாதிப்புக்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 91 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரத்தில் இதுவரை 196 கோடியே 94 லட்சத்து 932 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.