கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது.. மீண்டும் ஒரு அலை வீசுமோ என மக்கள் அச்சம்!!

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளதால் மீண்டும் ஒரு அலை வீசுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது.. மீண்டும் ஒரு அலை வீசுமோ என மக்கள் அச்சம்!!

ஒமிக்ரானுக்கு பிறகு குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. 93 நாட்களுக்கு பிறகு நேற்று புதிய பாதிப்பு 40 சதவீதமாக அதிகரித்தது.

இந்தநிலையில் இன்று புதிதாக 7 ஆயிரத்து 240 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 32 ஆயிரத்து 498 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தீவிர தொற்றிலிருந்து மீளமுடியாமல் 8 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 723 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 591 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 226 லட்சத்து 40 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 15 லட்சத்து 43 ஆயிரத்து 748 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதன் மூலம், தடுப்பூசி செலுத்தப்பட்ட  மொத்த எண்ணிக்கை 194 கோடியே 59 லட்சத்து 81 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.