நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசார் பேரணி.. எம்.பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசார் பேரணி நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசார் பேரணி.. எம்.பிக்கள் சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகளை ‘யங் இந்தியன் நிறுவனத்துக்கு’ மாற்றியதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்த கூறப்பட்டது.

சோனியா காந்தியிடம் விசாரணை:

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை 3வது நாளாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் எம்.பிக்கள் பேரணி:

இதனிடையே அமலாக்கத்துறையை ஏவிவிட்டு, கட்சியின் உயர் தலைவரிடம் விசாரணை நடத்துவதாகக் கூறி, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, விஜய் சவுக் நோக்கி காங்கிரஸ் எம்.பிக்கள் பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர்.

சத்தியாகிரக போராட்டம் இல்லை.. உண்மையை மறைக்கும் முயற்சி: 

இதனிடையே அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸார் நடத்தி வரும் போராட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக தலைவர்கள், இது சத்தியாகிரக போராட்டம் இல்லை என்றும், உண்மையை மறைக்கும் முயற்சி எனவும் சாடியுள்ளனர். காந்தி குடும்பத்தை காப்பாற்றவே இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருப்பு துணி தலைப்பா கட்டி போராட்டம்:

முன்னதாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் கருப்பு துணியால் தலைப்பாகை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.