காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனம்... கபில் சிபல் வீட்டு முன் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..

விரைவில் நலம் பெறுங்கள், கட்சியை விட்டு வெளியேறுங்கள் என கபில் சிபலுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சனம்... கபில் சிபல் வீட்டு முன் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக முதலமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். அதோடு மாநிலத் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவர்கள் என்று யாரும் இல்லை என்றும், முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்,  காங்கிரசில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் அப்போதுதான் நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்திருந்தார். 

கபில் சிபல் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்காதது குறித்து மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கபில் சிபல் வீட்டுமுன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் நலம் பெறுங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை ஏந்தி  போராட்டகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கட்சியை விட்டு வெளியேறவும் எனக் கோஷம் எழுப்பியதுடன், தக்காளி பழங்களை வீசி அவரது காரை சேதப்படுத்தினர்.