பாஜக சர்வாதிகார ஆட்சியா?!! கார்கே கூறுவதென்ன!!

பாஜக சர்வாதிகார ஆட்சியா?!! கார்கே கூறுவதென்ன!!

சமூகம், நாட்டின் சுதந்திரம், குறிப்பாக சமூக சமத்துவத்துக்காகப் போராடிய மக்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்.

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்ற பிறகு, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து அவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் தேசிய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, ”சமூகம், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்.  குறிப்பாக சமூக சமத்துவத்திற்காக போராடினால் வரும் நாட்கள் பிரகாசமாகவும் தேசிய நலனுக்கு ஆதரவாகவும் இருக்கும்.” என்று பேசியுள்ளார்.

ட்விட்டர் பதிவு:


"மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் இரட்சிப்புக்கான பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவிற்கான பாதையாக அமைந்து  இறுதியில் சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்லும்." என்று கார்கே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    நேருவின் ஐந்து தவறுகளால் 70 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இந்தியா...!!! ஒரே திட்டத்தால் தவறுகளை சரி செய்தாரா மோடி??!!