நேருவின் ஐந்து தவறுகளால் 70 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இந்தியா...!!! ஒரே திட்டத்தால் தவறுகளை சரி செய்தாரா மோடி??!!

நேரு இந்த ஐந்து தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும்.

நேருவின் ஐந்து தவறுகளால் 70 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இந்தியா...!!! ஒரே திட்டத்தால் தவறுகளை சரி செய்தாரா மோடி??!!

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவருடைய சுய லாபத்திற்காகவே காஷ்மீரானது இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை என பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவுடன் இணைய விரும்பினார்.  ஆனால் நேரு அரசு அதை மறுத்து விட்டதாக பாஜக கூறி வருகிறது.

இந்தியாவில் பரப்பபட்ட பொய்யுரை:

இதன் கீழ், பிரதமர் மோடி, நேருவின் இந்த தவறுகளை சரிசெய்து, சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தார், இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்க முடிந்தது. 1947ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், “இந்தியாவுடன் இணைவதில் சிக்கல் உள்ள சமஸ்தானங்களில் காஷ்மீர் இருந்தது என்று எழுபது ஆண்டுகளாக இந்த வரலாற்றுப் பொய் பரப்பப்பட்டு வருகிறது.” ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரிவினைக் குறித்தும் அதில் நேருவின் நிலைப்பாட்டைக் குறித்தும் நேருவின் ஐந்து தவறுகளைக் குறித்தும் கிரண் ரிஜ்ஜூ கூறுவதை விவாதிக்கலாம்.
நடந்தது என்ன?:

கிட்டத்தட்ட 560 சமஸ்தானங்களில், ஹைதராபாத் மற்றும் ஜூனாகத் மட்டுமே சில பிரச்சனைகளை உருவாக்கியது. காஷ்மீர் மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் இணைவது குறித்து மெத்தனமான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை. மாறாக, ஜூலை 1947 இல், அவரே இந்தியாவுடன் இணைவதற்காக நாட்டின் தலைவர்களை அணுகினார்.  இந்த உண்மையை நேருவே  24 ஜூலை 1952 இல் மக்களவை கூட்டத்தில் ஏற்றுக்கொண்டார். 

இணைப்பு நடந்தபோது:

காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் உறுப்புரை 35க்கு பதிலாக பிரிவு 51ன் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரிவு 35 ஆனது சர்ச்சைக்குரிய நிலத்திற்காக  உருவாக்கப்பட்டது. மேலும் சட்டப்பிரிவு 51ஆனது நாட்டின் நிலத்தின் மீதான சட்டவிரோதமான வெளிநாட்டு ஆக்கிரமிப்பு பற்றியது.   27 அக்டோபர் 1947 இல் ஹரி சிங் கையொப்பமிட்ட பிறகு, நேரு காஷ்மீர் பிரச்சினையை சட்டப்பிரிவு 51 இன் கீழ் எடுத்திருக்க வேண்டும்.  ஆனால் அது பிரிவு 35ன் கீழ் வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பதில் எழுந்த பிரச்சினை:

இந்த தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பு உத்தரவை இந்தியா நிறுத்துகிறது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டது.  பொது வாக்கெடுப்பின் முதல் நிபந்தனை போர் நிறுத்தம் மற்றும் இரண்டாவது நிபந்தனை பாகிஸ்தான் துருப்புக்களை திரும்பப் பெறுவது.  அதன் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் படைகளை வாபஸ் பெறவில்லை என்றால், வாக்கெடுப்பு சாத்தியமில்லை. 

நேரு உருவாக்கிய பிரிவினைவாதம்:

ஐநாவின் இந்திய-பாகிஸ்தான் ஆணையமே 5 ஜனவரி 1949 அன்று இதை ஒப்புக்கொண்டது. ஆனாலும் இந்தியா பொதுவாக வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்து வருகிறது என்று தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.  பிரிவு 370 மூலம் பிரிவினைவாத மனப்பான்மையை நேரு நிலைநிறுத்தினார். ஐக்கிய மாகாணங்களின் அப்போதைய பிரதிநிதியான மௌலானா ஹஸ்ரத் மொஹானி 17 அக்டோபர் 1949 அன்று இதே கேள்வியை எழுப்பினார்.  

இதற்கு நேருவும் அவரது அதிகாரிகளும் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு கொள்கை வகுக்கப்பட்டது, பிரிவினைவாத எண்ணம் இந்தியாவின் கழுத்தில் கயிறு போல் போடப்பட்டது.

நேருவின் பிடிவாதமான கொள்கை:

நேரு அவரது நண்பரை ஆட்சியில் அமர்த்த விரும்பினார்.  அக்டோபர் 20, 1947 அன்று காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் நேரு சிறிதளவு கூட கவலையடைந்ததாக தெரியவில்லை. அந்த நேரத்திலும் ஹரி சிங் மீண்டும் நேருவிடம் இந்தியாவுடன் இணைவதற்கான கோரிக்கையை வைத்தார். இந்த நேரத்திலும் நேரு அவரது தனிப்பட்ட முடிவில் உறுதியாகவே இருந்து வந்தார்.

அடுத்த நாள், அக்டோபர் 21 அன்று, அப்போதைய காஷ்மீர் பிரதமர் எம்.சி.மஹாஜனிடம் நேரு, “தற்போதைய சூழ்நிலையில் காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைவதை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.” என்று நேரு கூறினார் என ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

நண்பருக்கான பிரிவினை:

காஷ்மீரில் ஒரு தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். ஷேக் அப்துல்லா இங்கு மிகவும் பிரபலமானவர். அவரை ஆட்சி அமைக்கச் சொல்ல வேண்டும். ஷேக் நேருவின் நண்பர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதை விட முக்கியமானது, காஷ்மீரின் அதிகாரம் அவரது நண்பருக்கு கிடைத்தாக வேண்டும் என நேரு எண்ணினார் என ரிஜிஜு கூறியுள்ளார். ஜூலை 1947 இல் அது இணைக்கப்பட்டிருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரில் செயல்பட்டிருக்காது.  

இன்று காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாதத்தை நாம் சமாளிக்க வேண்டியதில்லை.  1990 இல் காஷ்மீரி இந்துக்கள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார்கள் என்று ரிஜ்ஜூ கூறியுள்ளார்.

தவறுகளை சரிசெய்த மோடி:

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் மற்றும் ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்துள்ளார்.  நேருவின் ஐந்து தவறுகளைக் குறிப்பிட்டு, அந்த தவறுகளாலேயே நாடு எழுபது ஆண்டுகளாக போராடியது.  2019 ஆம் ஆண்டு நாட்டின் வரலாறு ஒரு புதிய திருப்பத்தை சந்தித்தது.  'இந்தியா முதலில்' என்னும் பிரதமர் மோடியின் திட்டம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரே கொள்கையாக மாறியது என்று ரிஜிஜு கூறியுள்ளார். 

பாஜக தலைவர்கள் கருத்து:

நேரு இந்தத் தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர் பாஜக தலைவர்கள்.  காஷ்மீர் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறும் வேறுவிதமாக இருந்திருக்கும் என்று பல பாஜக தலைவர்களும் அவர்களின் கருத்தை கூறியுள்ளனர்.

மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இந்த தவறுகள் இமயமலை போல் பெரியது” என்று கூறியுள்ளார். 

“அவர்களால் 70 ஆண்டுகளாக பல வாய்ப்புகளை இழந்துள்ளோம்” என்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

“நேருவின் வரலாற்று தரம் வாய்ந்த பொய்களுக்கு இந்தியா மிகப் பெரிய விலை கொடுத்துள்ளது” மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

”நேருவின் காஷ்மீர் கொள்கை, அவரால் எப்போதும் மாற்ற முடியாத தவறுகளால் நிறைந்தது” என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கூறுகையில், ”இவை பல ஆண்டுகளாக முழு தேசத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் நாட்டின் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியுள்ளார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறும்போது, ​​”நேருவின் அணுகுமுறையானது மாபெரும் சதி” என்று தெரிவித்துள்ளார். 

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ஆகியோர், ”நேருவின் தவறுகளால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளனர்.

-நப்பசலையார்