22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்..!!

22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்..!!

காங்கிரசின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் நாளை நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் நாடு முழுவதும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில் நாளை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களில் உள்ள கட்சி தலைமையகத்தில், காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். வாக்களிக்க அனுமதி உடையவர்களுக்கு QR கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவடைந்தவுடன்...:

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் பெட்டிகள் டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. வரும் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 22 ஆண்டுகளாக, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என காந்தி குடும்பத்தினரே தொடர்ந்து அக்கட்சியின் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                        -நப்பசலையார்

இதையும் படிக்க:  ”நாட்டின் எதிர்காலம் ஆபத்தில்....” செய்தியாளர்கள் சந்திப்பில் சசி தரூர்!!!