மோடியால் இந்தியாவில் இருந்து முழுமையாக அகற்றப்பட்ட காலனித்துவ மனநிலை!!! அதிகாரத்திலிருந்து கடமையாக மாறிய ஆட்சிமுறை!!!

மோடியால் இந்தியாவில் இருந்து முழுமையாக அகற்றப்பட்ட காலனித்துவ மனநிலை!!!  அதிகாரத்திலிருந்து கடமையாக மாறிய ஆட்சிமுறை!!!

குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்ட்ரல் விஸ்டாவையும் ராஜ்பாத்தில் இருந்து கர்தவ்ய பாதை என பெயர் மாற்றம் செய்யப்படும் பாதையும்  பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

10 முக்கிய சிறப்பு அம்சங்கள்:

1.  ராஜ்பாத்தின் பெயரை மாற்றியமைக்க, "காலனித்துவ மனநிலையின் தடயங்களை அகற்றுவது" என்ற பிரதமர் மோடியின் சுதந்திர தின உறுதிப்பாடு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 'ராஜ்' என்றால் "அதிகாரம்" அல்லது "ஆட்சி" எனப் பொருள், 'கர்தவ்யா' என்றால் "கடமை" எனப் பொருள்.  அரசாங்கத்தின் கூற்றுப்படி, இது அதிகாரத்தின் சின்னத்தில் இருந்து  பொது உடைமை  மாற்றத்தை குறிக்கிறது.

2.  ராஜ்பாத் இந்தியாவின் சுதந்திரத்தின் விடியலுக்கு சாட்சியாக இருந்தது. மேலும் ஆண்டுதோறும் குடியரசு தின விழா இங்கு நடத்தப்படுகிறது. ரைசினா ஹில் வளாகத்திலிருந்து இந்தியா கேட் வரை நடைபெறும் அணிவகுப்பு பாதை முதலில் பவுல்வர்டு முதலில் கிங்ஸ்வே என்றே இருந்தது.  இது 1911ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் தலைநகரை கல்கத்தாவிலிருந்து மாற்றிய பின்னர் கட்டப்பட்ட 'புதிய' டெல்லி நகரத்தின் மைய அச்சாகும்.

3.  மோடி அரசாங்கத்தின் லட்சியமான சென்ட்ரல் விஸ்டா மறுவளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை.

4.  அரசாங்கம் ஐந்து பிரத்யேக விற்பனை மண்டலங்களை அமைத்துள்ளது. அங்கு தலா 40 விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.

5.  இந்தியா கேட் அருகே தலா எட்டு அலகுகள் கொண்ட இரண்டு கடைத் தொகுதிகளும் கட்டப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் தங்கள் உணவுக் கடைகளை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

6.   பல ஆண்டுகளாக, ராஜ்பாத் மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் அண்மை பகுதிகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வருவதால் உள்கட்டமைப்புக்கு முக்கியம் கொடுத்துள்ளது. எனவே, பொதுக் கழிப்பறை, குடிநீர், தெரு மரச்சாமான்கள், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

7.  சென்ட்ரல் விஸ்டாவின் மறுவடிவமைப்பு புதிய பாராளுமன்ற கட்டிடம், ஒரு பொது மத்திய செயலகம், ஒரு புதிய பிரதமர் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் ஒரு புதிய துணை குடியரசுத்தலைவர் அலுவலகம் ஆகியவற்றை உள்ளடக்கியது, மேலும் 3-கிமீ ராஜ்பாத்தை (தற்போது கர்தவ்யா பாதை) புதுப்பிக்கப்பட்டுள்ளது.

8.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை, இந்தியா கேட் விதானத்தில் வைக்கப்படும் புதிய மையமாக இருக்கும். 280 டன் எடையுள்ள கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலை 28 அடி உயரம் கொண்டதாக உள்ளது. 

9.  சிலை மீது, சிற்பிகள் குழு 26,000 மணிநேரம் "தீவிரமான கலை முயற்சியை" செலவிட்டுள்ளது. 

10.  140 சக்கரங்கள் கொண்ட 100 அடி நீள டிரக், தெலுங்கானாவில் உள்ள கம்மம் முதல் புது தில்லி வரை 1,665 கிமீ தூரம் பயணிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”அவர் நிச்சயம் நிறுத்துவார்” உக்ரன் அதிபருக்கு நம்பிக்கை அளித்த பிரெஞ்சு அதிபர்