உத்திரப்பிரதேசத்தில் ரத்தம் செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு HIV..! அதிர்ச்சியில் மக்கள்..!

உத்திரப்பிரதேசத்தில்  ரத்தம் செலுத்தப்பட்ட  குழந்தைகளுக்கு HIV..! அதிர்ச்சியில் மக்கள்..!

உத்தப்பிரதேசம் கான்பூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி - ஹெபடைடிஸ் நோய் கண்டறியப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகளுக்கு, தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து இருவருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் B, 5 பேருக்கு ஹெபடைடிஸ் C இருப்பது கண்டறியப்பட்டது.

ரத்தத்தை பரிசோதிக்காமல் செலுத்தியதால் விபரீதம் நடந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க   |  இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை..!