ஆட்சியை உடைக்கும் பாஜக.. தொழிலே இது தான் போல - மம்தா பேனர்ஜி காட்டம்!!

நாடு முழுவதும் ஆட்சியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அதை தனது தொழிலாக கொண்டிருப்பதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சியை உடைக்கும் பாஜக.. தொழிலே இது தான் போல - மம்தா பேனர்ஜி காட்டம்!!

காங்கிரஸ் கட்சியினர் தியாகிகள் தினம்:

கடந்த 1993ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக மம்தா பானர்ஜி இருந்த போது, ​​அப்போதைய இடதுசாரி முன்னணி அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். இதை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை 21ஆம் தேதியை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கின்றனர்.

எம்.பி. அபிஷேக் பானர்ஜி உரை:

இந்நிலையில், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியாகிகள் தின பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. எஸ்பிளனேட் என்னும் பகுதியில் நடைபெற்ற பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி பங்கேற்று பொதுமக்களிடம் உரையாற்றினார். இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பாஜகவை மக்கள் விரட்டி அடிப்பார்கள் - மம்தா பேனர்ஜி:

இதைத்தொடர்ந்து பேசிய, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி, முதுகெலும்பு இல்லாத பாஜகவை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து நாடு முழுவதும் ஆட்சியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அதை தனது தொழிலாக கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஜி.எஸ்.டி. குறித்து பேசிய அவர், எளிய உணவுகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதித்து மக்களை வஞ்சிப்பதாகவும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பை பாஜக அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.