ஆகஸ்ட்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும்- சி.பி.எஸ்.இ அறிவிப்பு!

12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ம் தேதிக்குள்ளாக நடத்தப்படும் என்று CBSE அறிவித்துள்ளது.

ஆகஸ்ட்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும்- சி.பி.எஸ்.இ அறிவிப்பு!

12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ம் தேதிக்குள்ளாக நடத்தப்படும் என்று CBSE அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020-2021-ஆம் ஆண்டுக்கான CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத காத்திருந்த தனித்தேர்வர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்றும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள்ளாக தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் CBSE தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு விரைவாக முடிவுகள் வெளியிடப்படும் வரை, கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த UGC நடவடிக்கை எடுக்கும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.