பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகள்...! 20 ஆயிரம் வாத்து, கோழிகள் அழிப்பு...!

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகள்...! 20 ஆயிரம் வாத்து, கோழிகள் அழிப்பு...!

கேரள மாநிலத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஹரிப்பாடு என்ற பகுதியில் செயல்பட்டு வரும் பண்ணைகளில் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை துறை அதிகாரிகள் அந்த பண்ணைகளில், சோதனை நடத்தி பறவைகளின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகளை அழிக்க மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து 20 ஆயிரம் கோழி, வாத்துக்கள் அழிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்புகள் உள்ளதா எனவும் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க :  பத்திரிக்கையாளர்களுடன் காயத்ரி ரகுராம் வாக்குவாதம்...பாதியில் முடிந்த செய்தியாளர்கள் சந்திப்பு!