பீகார் அமைச்சரவை விரிவாக்கம்...!

பீகார் அமைச்சரவை  விரிவாக்கம்...!

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில், புதிதாக 31 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். 

பீகார் 2020 அரசியல்:

பீகாரில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதில் பாஜக 77 இடங்களிலும், ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.

பாஜகவுடனான உறவு முறிவு:

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் இடையே உரசல்கள் அதிகரித்தன. தங்களது கட்சியை பலவீனப்படுத்துவதற்கு பாஜக முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டி வந்த ஐக்கிய ஜனதா தளம், மத்திய அரசின் பல்வேறு கூட்டங்களை புறக்கணித்தது. அதேபோல் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். இதன்பின்னர் பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு நிலவி வந்த நிலையில், அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி:

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்தார். அதன்பின் பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்:

இந்த நிலையில், பீகார் மாநில புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 31 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில், 1..தேஜஸ்வி யாதவ்- நெடுஞ்சாலை மற்றும்
2..தேஜ் பிரதாப் யாதவ் 3..அலோக் மேத்தா 4..சுரேந்திர யாதவ் 5.சந்திரசேகர் 6.லலித் யாதவ் 7..பாய் வீரேந்திரா 8..ராமானந்த் யாதவ் 9..சுதாகர் சிங்
10. குமார் சர்ப்ஜித் 11..சுரேந்திர ராம் 12.அக்துல் ஷாஹீன் ஷாநவாஸ் 13..பாரத் பூஷன் மண்டல் 14..சமீர் மஹாசேத் 15.. அனிதா தேவி 16..முகமது இஸ்ராயில் மன்சூரி ஆகிய 16 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் சார்பில், 1.அஃபாக் ஆலம் 2..முராரி கௌதம் ஆகிய 2 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா சார்பில், 1..சந்தோஷ் சுமனும், ஜக்கிய ஜனதா தளம் சார்பில், 1..நிதிஷ்குமார்- உள்துறை 2..ஷீலா குமாரி மண்டல் 3..விஜய் குமார் சவுத்ரி 4..அசோக் சவுத்ரி 5..சஞ்சய் ஜா 6..மதன் சாஹ்னி 7..ஜெயந்த் ராஜ் 8..பிஜேந்திர யாதவ் 9.ஷ்ரவன் குமார் 10..சுனில் குமார் 
11..ஜாமா கான் ஆகிய 11 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ. ..சுமித் குமார் சிங் உள்ளிட்ட 31 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். மேலும் இந்த பதவி ஏற்பு விழாவில் லாலு பிரசாத் யாதவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.