மராட்டிய கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி - சரத்பவார் குற்றச்சாட்டு

மராட்டிய கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி - சரத்பவார் குற்றச்சாட்டு

மகாராஷ்ட்ரா மாநில அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் அம்மாநில அமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையில் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சிவசேனா தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்த பேட்டி அளித்த சரத் பவார், பாஜக மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தப் பிரச்சனையில் இருந்து சிவசேனா வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த பிரச்சனைகளுக்கு இடையே மகாராஷ்ட்ராவில் உள்ள தனது கட்சி எம்எல்ஏக்கள் 51 பேரையும் பாதுகாக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.