சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் ஆந்திரா முதலிடம்!!

சிறுவர் சிறுமியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திரா முதல் இடம்...

சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் ஆந்திரா முதலிடம்!!

இந்தியாவில் 15 முதல் 18 வயது  வரையிலான சிறுவர்-சிறுமியருக்கு கடந்த 3-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தி வரும்நிலையில் ஆந்திர முன்னிலை வகுக்கிறது.

 உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தலை ஓங்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி இந்தியாவில் சிறுவர்-சிறுமியருக்கு கடந்த 3-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் அனைத்து மாநிலங்களும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 3-ஆம் தேதி முதல்  நேற்று மாலை வரை உள்ள நிலவரப்படி 85 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் அதிக தடுப்பூசி போட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்து உள்ளது.

ஆந்திராவில் மொத்தமாக உள்ள 15முதல் 18 வயது வரை உள்ள பிரிவினரில் 39.8 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இமாசல பிரதேசம் 37 சதவீதமும், மூன்றாம் இடத்தில் குஜராத் 30.9 சதவீதமும் உள்ளது.

மேலும், தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமன் யூனியன் பிரதேசம் 28.3 சதவீதமும், கர்நாடகா 25.3 சதவீதமும், உத்தரகாண்ட் 22.5 சதவீதமும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் முறையே 20.6, 20.5 சதவீதமும் தடுப்பூசி போட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.