" கலவர பூமியாக காட்சி அளிக்கும் மணிப்பூர்ருக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்" - திமு.க. எம்.பி. திருச்சி சிவா.

" கலவர பூமியாக காட்சி அளிக்கும் மணிப்பூர்ருக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும்" - திமு.க.  எம்.பி.  திருச்சி சிவா.


கலவர பூமியாக காட்சி அளிக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என திமு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கிய கலவரத்தால் மாநிலம் முழுவதும் போர்க்களம் போன்று காட்சி அளிக்கிறது. மோதல் மற்றும் கலவரத்தில் 
110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததால், எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. 

Manipur violence intensifies despite govt protests - News Nation English

இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே,பி.நட்டா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரெக் ஓ.பிரைன், மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பித்துரை என 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, மணிப்பூர் மாநிலத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். மேலும், மணிப்பூர் கலவரம் மத்திய - மாநில  அரசுகளின் தோல்வியை எதிரொலிப்பது போல் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். 

Footprince of God: August 2013

இதேபோல், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அடுத்த ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தி மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ.பிரைன் வலியுறுத்தி உள்ளார்.  

அதே நேரத்தில், மணிப்பூரில் கலவரம் வெடித்து 50 நாட்களுக்கு மேலான நிலையில் தற்போது நடைபெறும் அனைத்துகட்சி கூட்டம் காலம் கடந்த ஒன்று என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும், மணிப்பூரில் தீ பற்றி எரியும் நிலையில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக புகார் தெரிவித்துள்ள அவர், பிரதமர் நாட்டில் இல்லாதபோது நடைபெறும் இந்த அனைத்து கட்சி கூட்டம் ஏற்புடையது அல்ல என்பதால் இதனை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க    | " Google CEO ஆனாலும் ஜாதி பெயர் பின்னால் வரும்.." - எம்.பி. கனிமொழி சாடல்..!