சுற்றுலா தலங்களுக்கு வராதீங்க... எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை...

சுற்றுலாதலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்காவிட்டால், தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தலங்களுக்கு வராதீங்க... எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை...
நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலேரியா, அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
மேலும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை என்பதால், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது, உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும், தற்போதைய சூழலில் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.