பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 3 பேர் வீர மரணம்...!

பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உள்பட 3 பேர் வீர மரணம்...!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்திய இராணுவ முகாமை நோக்கி வந்த தீவிரவாதிகள்:

ஜம்மு காஷ்மீரில், ராஜோரி மாவட்டம் பர்கலில் உள்ள இந்திய இராணுவ முகாமை நோக்கி தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் நெருங்குவதை பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்ட  காவலர்கள் கண்டறிந்தனர். இதனால்  இராணுவ வீரர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருந்தனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்:

இராணுவ முகாமை நோக்கி வந்த பயங்கரவாதிகள், இராணுவ முகாமின் போஸ்ட்டுக்குள் நுழைவதற்காக இரண்டு கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் எச்சரிக்கை காவலர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, தீயணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை பின் தொடரவும் செய்தனர்.

என்கவுண்டர்:

இதையடுத்து, தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு சரி சமமாக நம் இந்திய இராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய இராணுவம் இரண்டு தீவிரவாதிகளை என்கவுண்டரில் சுட்டுகொன்றது. 

தற்கொலை தாக்குதல்:

இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலை கையில் எடுத்தனர். அந்த தாக்குதலை முறியடிக்கும் போது இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் காயமடைந்தனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீர மரணம்:

இந்திய இராணுவ முகாமை நோக்கி பயங்கர தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு இந்திய ராணுவத்தின் உயர்ந்த நிலைப்பாட்டை நிலைநிறுத்தியுள்ளனர் வீரம் மிக்க இராணுவ வீரர்கள். இந்த தாக்குதலின்போது, தமிழக வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த சப் ராஜேந்திர பிரசாத், ஹரியானாவை சேர்ந்த ரைபிள்மேன் மனோஜ் குமார், தமிழ்நாட்டை சேர்ந்த ரைபிள்மேன் லட்சுமணன்  உள்ளிட்ட மூன்று பேர் நாட்டுக்காக உயிர் தாகம் செய்துள்ளனர். நாட்டுக்காக தன் உயிரை இழந்த இவர்களின் பெருமையை காலம் என்றும் பறைசாற்றும்....