3 ஆண்டுகளில் 210 கல்லூரிகள் திறக்கப்பட்டன...! ராஜஸ்தான் முதலமைச்சர் பெருமிதம்...!

கடந்த 3 ஆண்டுகளில், ராஜஸ்தான் அரசு 210 கல்லூரிகள் தொடங்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளில் 210 கல்லூரிகள் திறக்கப்பட்டன...! ராஜஸ்தான் முதலமைச்சர் பெருமிதம்...!

கடந்த 3 ஆண்டுகளில், ராஜஸ்தான் அரசு 210 கல்லூரிகள் தொடங்கியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கடந்த 3 ஆண்டுகளில் 210 கல்லூரிகளைத் தொடங்கியுள்ளதாகவும், இது மாநிலத்தில் உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய படி எனவும் கூறியுள்ளார். மேலும், கல்லூரிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்த பெண் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது குறித்தும் கெலாட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ராஜஸ்தானை கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்ததாக மாற்றுவதே தனது குறிக்கோள் எனவும் இப்பணிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் சுமார் 250 அரசு கல்லூரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் தனது அரசு 3 ஆண்டுகளில் 210 கல்லூரிகளை தொடங்கியுள்ளது, இது உயர்கல்வி துறையில் ஒரு முக்கிய படியாகும், எனவும் கூறியுள்ளார். 

ஆகஸ்ட் மாதத்தில், சுமார் 130 கல்லூரி கட்டிடங்கள் திறக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படும் என்று கெலாட் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டில் இதுவரை 59,356 மாணவர்கள் அரசால் திறக்கப்பட்ட இந்த 210 மாநிலக் கல்லூரிகளில் உள்ள 45,302 இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறையும் எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.