செப்.17-ல் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்..! அனபெல்-சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள அனபெல்லா-சேதுபதி..!

செப்.17-ல் ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்..! அனபெல்-சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தமிழ் சினிமாவில் கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வில்லன், முக்கிய கதாபாத்திரம் அனைத்து விதமான ரோல்களிலும் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமையால் நம்மை அசற வைப்பவர். நவரசா ஆந்தாலஜி படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. .அதனை தொடர்ந்து அவரது துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியானது. 

இதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும், டாப்ஸிம் இணைந்து நடித்துள்ள அனபெல்லா-சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், யோகிபாபு, ராதிகா, தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதன் பின்னணி வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், படம் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.