7 ஆண்டுக்கு பின் மோதும் தல-தளபதி படங்கள்: அவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

7 ஆண்டுக்கு பின் மோதும் தல-தளபதி படங்கள்: அவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...

நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ திரைப்படத்தை, அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடுவதற்கான பணிகளில், தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். கடந்த பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த பொங்கலுக்கு ரசிகர்கள் ‘பீஸ்ட்’ மோடில் காத்திருக்கின்றனர்.  மற்றொருபுறம், நடிகர் அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு, தயாரிப்பாளர் போனி கபூரை, அஜித் ரசிகர்கள் தொல்லை செய்து வந்ததை மறக்க முடியாது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரச்கர்களை குஷிப்படுத்தியது. இந்த நிலையில், வரும் பொங்கலுக்கு அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடைசியாக கடந்த 2014 பொங்கலுக்கு விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் திரைப்படங்கள் மோதின. இதில், வீரம் திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.