சன்னிலியோன் படத்தின் டைட்டில் வெளியீடு..! ’’ஓ மை கோஸ்ட்’’ என தலைப்பு..!

காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியாகும் சன்னிலியோன் படம்..!

சன்னிலியோன் படத்தின் டைட்டில் வெளியீடு..! ’’ஓ மை கோஸ்ட்’’ என தலைப்பு..!

பிரபல பாலிவுட் நடிகையான சன்னிலியோன் தமிழில் கதாநாயகியாக களமிறங்கும் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட்-ல கவர்ச்சி நடிகையா வலம் வந்த சன்னிலியோன், இப்போ குணச்சித்திர கதாபாத்திரங்களை நடிச்சு வராங்க. தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்த சன்னிலியோன் வரலாற்று படமான 'வீரமாதேவி' படத்திலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் 'ரங்கீலா' என்னும் படத்தில் நடித்து வந்தார். 

அதனை தொடர்ந்து மலையாள இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் ’ஷீரோ’ என்னும் படத்திலும் நடித்து வந்தார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வந்த அந்தப் படம் தான் தனது முதல் தமிழ் படம் என சன்னிலியோன் டிவீட் செய்திருந்தார்.  இந்த நிலையில், தமிழில் காமெடி கலந்த ஹாரர் படமாக தயாராகி வந்த படத்தில் சன்னிலியோன் நடித்து வந்தார். இதில் அவருடன் இணைந்து, சதீஷ், யோகிபாபு, தர்ஷாகுப்தா, ஜிபிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. ’’ஓ மை கோஸ்ட்’’ என இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.