சிவகார்த்திகேயன் பாடிய பாடல் புதிய சாதனை...!!

சிவகார்த்திகேயன் பாடிய பாடல் புதிய சாதனை...!!

சீரியலில் நடித்ததன் மூலம்  சின்னத்திரையில் பிரபலமடைந்தவர் கவின். பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதற்கு பிறகு ஈகோ என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் கவின் கமிட்டாகி நடித்து முடித்தார்.

இவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். சமீபத்தில் லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது.

லிப்ட் படத்தில் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை பாடியுள்ளார்.இந்தப் பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னா மயிலை பாடலுக்கு கவின் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தற்போது வைரல் ஆகியுள்ளது.