கோலிவுட்டில் நடக்காத ஒன்னு.. 300 நாட்களில் 3மில்லியன்.. மாஸ் காட்டும் சிம்பு

STR ன் ஆஃபிசியல் இன்ஸ்டா பக்கத்தில் வெறும் 300 நாட்களில் 3மில்லியன் அதாது 30லட்சம் நபர்களை ஃபாலோவராக பெற்றுள்ளார் STR.

கோலிவுட்டில் நடக்காத ஒன்னு.. 300 நாட்களில் 3மில்லியன்.. மாஸ் காட்டும் சிம்பு

ஈஸ்வரன் படத்திற்கு உடல் எடையை குறைத்த தோற்றம ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுக்களைப் பெற்றது.

தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எடுக்கப்பட்ட மாநாடு படம் திரைக்கு தயாராகி வருகிறது.கௌதம் மேனனுட்ன் மீண்டும் கூட்டணி வைக்கும் STR வெந்து தணிந்தது காடு என்கிற பெயரில் நடித்து வந்தார்.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் STRக்கு இடைப்பட்ட பிரச்சினைக்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் STR ன் ஆஃபிசியல் இன்ஸ்டா பக்கத்தில் வெறும் 300 நாட்களில் 3மில்லியன் அதாது 30லட்சம் நபர்களை ஃபாலோவராக பெற்றுள்ளார் STR.

இது இதுவரை சமூக வலைகளில் பக்கம் கொண்ட எந்த தமிழ் நடிகருக்கும் கிடைத்ததில்லை என்று கூறி STR ரசிகர்கள் வெகுவாய் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைகளில் எங்கு பார்த்தாலும் STR 3M+ என்ற டைட்டிலில் சிம்புவின் புகைப்படங்கள் சுற்றி வருகின்றன.