15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ராதே ஷ்யாம் பாடல்..!

24 மணி நேரத்தில் பிரபாஸ் பட பாடல் சாதனை..!

15 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ராதே ஷ்யாம் பாடல்..!

பாகுபலி மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம்  முழுவதும் பிரபலாமானார் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உட்பட பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகிறது. பாகுபலிக்கு பிறகு அவரது படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால், அடுத்தப் படத்தை எப்படியும் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என உழைத்து வருகிறார். 

அதன் படி பிரபாஸ், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ராதே ஷ்யாம். 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ராதே ஷ்யாம் படத்தில் இருந்து கடந்த 1-ம் தேதி ஒரு பாடல் வெளியாகி இன்று வரை கிட்டத்தட்ட 40 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 8-ம் தேதி வெளியான மற்றும் ஒரு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களையும், தற்போது வரை 17 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.