விஜய் படத்தில் நடிக்கும் பிரபல நடன இயக்குநர்?

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் பிரபல நடன இயக்குநர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படத்தில் நடிக்கும் பிரபல நடன இயக்குநர்?

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் பிரபல நடன இயக்குநர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், சென்னையில் தான் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் சதீஷ் கிருஷ்ணன் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.