பெண் வேடத்தில் நடிக்க தயக்கமாக இருந்தது; பிரபுதேவா ஓபன் டாக்

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'பஹீரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பெண் வேடத்தில் நடிக்க தயக்கமாக இருந்தது; பிரபுதேவா ஓபன் டாக்

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'பஹீரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகைகள் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், ஜனனி, காயத்ரி, சாக்‌ஷி அகர்வால் மற்றும் சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரபுதேவா, சோனியா அகர்வாலுடன் பெண் வேடத்தில் நடிப்பதற்கு தயக்கமாக இருந்ததாகவும், படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்டப்பில் நடித்ததாகவும் தெரிவித்தார்.