ரிலீசுக்கு முன்பே வெளியான ‘விக்ரம்’ விமர்சனம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இன்றே படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிலீசுக்கு முன்பே வெளியான ‘விக்ரம்’ விமர்சனம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைவரையும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் படம் குறித்து வெளியாகும் அடுத்தடுத்த தகவல்களும், சர்வதேச லெவலில் நடைபெறும் ப்ரொமோஷன் பணிகள் ஆகியவை படம் மீதான ஒரு ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இன்னும் இரண்டு நாளில் திரையரங்குகளில் ரிலீசாக போகும் இந்த படம் அதற்குள் டிக்கெட் புக்கிங் மற்றும் விற்பனையிலேயே 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் முதல் வாரத்திற்கு பல திரையரங்குகளில் இப்போதே டிக்கெட்டுகள் இல்லாமல், ஹவுஸ் புல் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு ’விகரம்’ படத்திற்காக அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்றே படத்தின் விமர்சனம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சர்வதேச சென்சார் கழகம் என பெயரிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோலிவுட்டில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிகச் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் விக்ரம் படமும் ஒன்று. என்ன ஒரு அற்புதமான, தனித்துவமான High Voltage Action. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையை த்ரில்லிங்காகவே கொண்டு சென்றுள்ளனர். மேலும் கமல்ஹாசன், ஃபகத்ஃபாசில், விஜய் சேதுபதி மூவரும் மிக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அனைத்து விதத்திலும் இவர்கள் பார்ப்பவரின் மனதை கொள்ளையடித்து விட்டனர். க்ளைமாக்ஸில் தான் படத்தின் உச்சகட்ட த்ரில்லிங்கை வைத்துள்ளார்கள். விக்ரம் படம் சர்ப்ரைஸ் ஹிட்டாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் விக்ரம் படத்திற்கு 3.5/5 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.