நயன்தாராவை கட்டி அணைத்தப்படி புத்தாண்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்.!! 

நயன்தாரா விக்னேஷ் சிவனின் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவை கட்டி அணைத்தப்படி புத்தாண்டு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்.!! 

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும்  6 ஆண்டுகளாக காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர்.

எப்போ தான் கல்யாணம் பண்ணுவீங்க என அவரது ரசிகர்கள் விடாமல் நச்சரித்து வருகின்றனர். தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார் . இந்த படம் ரிலீஸை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2022 புத்தாண்டு தினத்தை இருவரும் சேர்ந்து ரொமான்டிக் மூடில் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஒவ்வொரு அழகான உள்ளங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2022 மிகவும் அமைதியான, மகிழ்ச்சியான, வெற்றிகரமான, ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.