ஜூலியை வச்சு செய்த வனிதா.. சைலண்ட் மோடில் ஜூலி.. சிதறி ஓடிய ஹவுஸ் மேட்ஸ்... ரசிகர்களின் ஆதரவை பெற்ற அந்த வாயாடி யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெளியிடப்பட்ட மூன்றாவது ப்ரோமோவில் வனிதா.. ஜூலியை கடும் கோபத்தில் திட்டி இருக்கிறார். மௌனம் காத்த ஜூலிக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஜூலியை வச்சு செய்த வனிதா.. சைலண்ட் மோடில்  ஜூலி.. சிதறி ஓடிய ஹவுஸ் மேட்ஸ்... ரசிகர்களின் ஆதரவை பெற்ற அந்த வாயாடி யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பெரும் பரபரப்பில் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் வெளியிடம் ப்ரோமோவில் வனிதாவின் பர்பாமன்ஸ் தான் காட்டப்பட்டு வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியில் வனிதாவை உசுப்பேத்தி கன்டென்ட் எடுக்கிறார்க்ளோ என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதில், ஹவுஸ் மேட்ஸ் சில பேர் போலீசாகவும், சில பேர் களவாணிகளாகவும் இருக்கும் டாஸ்க் இது... பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் டாஸ்க் வைத்து வேற லெவலுக்கு என்டர்டைன்மெண்ட் கொடுத்து வருகின்றனர்.

தற்போது, பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது ப்ரோமோவில் காவல்துறை உடையில் இருக்கும் வனிதாவின் பொருள்களை பல போட்டியாளர்கள் உடைத்து வருகின்றனர். அந்த வகையில், களவாணி டாஸ்க் செய்யும் போட்டியாளர்கள் அனைவரையும் விட்டு விட்டு ஜூலியை மட்டும் குறித்து வைத்து வனிதா மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இந்த வாரம் வனிதாவுக்கு கொடுக்க பட்ட ட்ரெண்டிங் போட்டியாளர் என்ற பேஜை கூட பாலாஜி முருகதால் உடைத்துவிட்டார். அதை எல்லாம் விட்டு விட்டு வனிதாவின் சென்ட் பாட்டிலை ஜீலி டாய்லெட்டில் போட்டி விட்டாராம். அதற்கு வனிதா பெரிய ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.

ஆர்ப்பாட்டத்தில் வனிதா மிகவும் கோபமடைந்து, பிச்சுருவேன்.. அசிங்கமா இல்லையா..? பொருளோடு வேல்யூ தெரியாதா..? என்று திட்டி தீர்த்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், எல்லாத்தையும் தூக்கி விசிறி அடிச்சுடுவேன்... ஸ்ட்ரென்த் காட்டணும்னு நினைக்கீறிங்க..? என்று ஆவேசமாக பேசும் போது அனைவரும் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது, ஷாரிக், என்னுடைய பொருளும் தான் போயிருக்கு என்று கூறியுள்ளார். அதற்கு வனிதா உங்க கூட நான் விளையாடனும் என்று இல்லை என கூறிருக்கிறார். அதற்கு ஷாரிக் நீங்க வேணா உங்க பொருள்களை பாத்துக்கோங்க, நீங்க இப்போ ட்ரெஸ்ஸ வேற மாத்திட்டீங்க நீங்க இப்போ கேம் உள்ளே தான் இருக்கீங்களா இல்லையான்னு தெரியலை என்று கூறி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவை எதிர்த்து பேசிய ஷாரிக்கு ஆதரவாக சமூக வலைதங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.