குற்றால அருவியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...!!

குற்றால அருவியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...!!

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கோடை மழையால் சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் நீர்வரத் துவங்கியுள்ளது. விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட பொது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இதே போல் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல் நகர் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியிலும், கடந்த 2 நாட்களாக பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி,  பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மிதமான நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

கோடை வெயிலின் வெப்பத்தை தனிக்கின்ற வகையில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் கோடை விடுமுறை காலம் தொடங்கியதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர தொடங்கியுள்ளனர். மேலும் மழையின காரணமாக தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?