கல்யாணம் பண்ணா இப்படித்தான் பண்ணுவேன்... ஓபன் டாக் மேகா ஆகாஷ்

கல்யாணம் பண்ணா இப்படித்தான் பண்ணுவேன்... ஓபன் டாக் மேகா ஆகாஷ்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதற்கு பின் இவர் வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களின் மூலமாக  தமிழ் சினிமாவில் முகம் அறியப்பட்டார்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் “யாதும ஊரே யாவரும் கேளிர்” என்கிற படத்தில் நடித்தும் வருகிறார். இப்போதைய தருணத்தில் பிசியாக கால்ஷீட்டுகளை ஒதுக்கி வரும் நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில விடயங்களை பேசியிருந்தார்.

அப்போது  பேசியதாவது, பெண்ணாக பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஆசை நம் மீது அன்பு காட்டுபவர்களோடு எப்போதும் பயணிக்க வேண்டும் என்பதே என்றும்.குழந்தை முதல் குமரி வரை அப்பா அம்மாவின் பாசம் யாவருக்கும் ஈடற்றதாய் அமையும் ஆனால் அதற்கு பிறகு கணவரின் பாசத்தை பலரும் உணர வேண்டும் அல்லது அன்பான கணவரை தேர்விட வேண்டும் என்றும் கூறினார்.