’வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியீடு..!!

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் வலிமை திரைப்படம் உருவானது.

இப்படத்தின் முதல் பாடல், டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.