ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நடிகை நிவேதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தான் ஆர்டர் செய்த ஃபிரைட் ரைஸ்யில் கரப்பான் பூச்சி இருந்ததாக  நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நடிகை நிவேதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமா துறையிலும் பல படம் நடித்துஉள்ளார். தமிழ் ,தெலுங்கு மற்றும் பல மொழிகளில் சினிமாத்துறையில் வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் கூறியுள்ளார்.

ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் உணவு ஆர்டர் செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ். அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அந்த ஹோட்டல் மீது புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளார். மேலும் தான் உணவு ஆர்டர் செய்த Moonlight உணவகத்தை செயலியிலிருந்து நீக்கவும் நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.