"ஜோதி" படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு!!

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ஜோதி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

"ஜோதி" படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீடு!!

எஸ் பி ராஜாசேதுபதி தயாரிப்பில் ஏ வி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜோதி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. காதல் என்பது காமம் மட்டுமல்ல என்பதை அழகாக உணர்த்தும் வகையில், கார்த்திக் குரலில் இந்த பாடல் பல ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ஜீவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு நீங்க இடம் பிடித்திருந்தார் வெற்றி. அவருடன், டூலெட் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த ஷீலா, தற்போது ஜோதி என்ற வித்தியாசமான படத்தில் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த ஜோதி படத்தின் முதல் சிங்கில் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

போவதெங்கே என்ற காதல் பாடல், கார்த்திக் குரலில் மிகவும் அழகாக உருவாகி இருக்கிறது. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், கார்த்திக் நேதா என்பவரது வார்த்தைகள், காதலின் பிரிவை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்.

இப்பாடல், கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான காதல், வெறும் காமத்தை மட்டும் வெளிப்படுத்தாது என்பதை மிக அழகாக காட்டுகிறது. கணவன் மனைவி பிரிவுக்குப் பிறகு இருக்கும் உருக்கமான வேதனையை பாடலில் வரிகள் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த பாடலை, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை ஷிவானி நாராயணன், தர்ஷன், ஸ்மிருதி வெங்கட், அசார் மற்றும் இசையமைப்பாளர் டி இமான், இன்று SRM கல்லூரியில் வெளியிட்டனர். இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.