‘கைதி’ செட்டுல இவரு என்னய்யா பன்னுறாரு?- குவியும் ரசிகர்களின் கமெண்டுகள்...

‘கைதி’ படத்தின் செட்டில், டி.ராஜேந்திரன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கைதி’ செட்டுல இவரு என்னய்யா பன்னுறாரு?- குவியும் ரசிகர்களின் கமெண்டுகள்...

2019ம் ஆண்டு, கதாநாயகி இல்லாமல், காதல் பாடல்கல் இல்லாமல் மிகவும் வித்தியாசமான ஒரு படைப்பாக உருவானது தான் கார்த்தியின் ‘கைதி’. யாரும் எதிர்பாராத அளவில், லோகேஷ் கனகராஜ் கொடுத்த சிறப்பான படம் தான் ‘கைதி’. கார்த்தியுடன், நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடித்திருந்த நிலையில், இந்த படம் பெரிதாக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், படம் வெளியாகி இன்றோடு 3 வருடங்கள் கடந்த நிலையில், படக்குழு, ‘கைதி’ படம் எடுக்கப்பட்ட இடத்தின் புகைப்படங்களை வெளியிட்டது. அந்த போட்டோக்களில், டி. ராஜேந்திரன் இருந்தார். இவர் எங்கிருந்து இதில் வ்னதார் என அனைவரும் கேள்வி எழுப்பியதில் தான் தெரிந்தது, கைதி படத்தின் செட் போடப்பட்டது அவரது இடத்தில் தான் என்று.

இதனால், ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், கைதி படம் செட்டு போட்டு எடுக்கப்பட்டது தான். உண்மையில் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டது என நினைத்திருந்த சினிமா ரசிகர்களுக்கு இந்த தகவல் ஒரு மாபெரும் அதிர்ர்சியாக இருந்தது என்பதில் யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு பலரும், தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தலைவரே நீங்கள் எங்கே இங்கு என்றும், சித்தப்பா நீங்களா என்றெல்லாம் கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.